இலவச பேருந்து அட்டையைப் பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் நகர்ப்புற, தொடர் மற்றும் தாழ்தள சொகுசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அரசு பணம் கொடுக்கிறது. ஆகையால், இலவச பேருந்து அட்டை (பஸ் பாஸ்) வைத்திருக்கும் பள்ளி மாணவர்கள் நகர்ப்புற, தொடர் மற்றும் தாழ்தள சொகுசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்றார்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் கூறினார்.