நெல்லை அண்ணா பல்கலைக்கழக பகுதி நேர பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப வினியோக தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் காளியப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெல்லை அண்ணா பல்கலைக்கழத்தில் பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மையங்களில் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.500 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கான கட்டணம் ரூ.250 வசூலிக்கப்படுகிறது.
விண்ணப்பம் வாங்க கடைசி நாள் 8-12-2008 என்று அறிவிக்கப்பட்டது. அந்த தேதி தற்போது நீடிக்கப்பட்டு டிசம்பர் 26ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே நாள் மாலை 5 மணிக்குள் கொடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்திலும் விண்ணப்பங்களை பெறலாம்" என்று கூறப்பட்டுள்ளது.