Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரூப்-1 நேர்முகத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி!

Advertiesment
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஐஏஎஸ் அகாடமி
, புதன், 10 டிசம்பர் 2008 (15:41 IST)
துணை ஆ‌ட்‌சிய‌ர் உ‌‌ள்‌ளி‌ட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 நேர்முகத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உ‌ள்ளதாக சென்னை அண்ணா நகரில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ். அகாட‌மி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக அந்நிறுவனம் வெளியிட்டு‌ள்ள செய்திக்குறிப்‌பி‌ல்,"துணை ஆட்சியர் (ஆர்.டி.ஓ.), டி.எஸ்.பி., வணிகவரி அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்காக நடைபெற்ற முதல் நிலைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி வெளியிடப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு டிசம்பர் 26ஆ‌ம் தே‌தி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

இ‌ந்த நே‌ர்‌முக‌த் தே‌ர்வு‌க்கான இலவசப் பயிற்சி சங்கர் ஐ.ஏ.எஸ். அகடமியில் 3 நாள் அளிக்கப்பட உள்ளது. மாதிரி நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 044-64597222, 26216435, 94441-66435 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil