சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கான 3 ஆண்டு சட்டப் படிப்பு தேர்வு, வரும் 10ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கான 3 ஆண்டு சட்டப் படிப்பு தேர்வு, 10ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்கும்.
தேர்வுகள் காலை மட்டும் நடக்கும். சேப்பாக்கத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்கக கட்டிடத்தில் தேர்வுகள் நடக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.