சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் இலவச தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக் கழகம் (தாட்கோ) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக மத்திய அரசின் தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் (என்.ஐ.எஃப்.டி.) அளிக்கப்பட உள்ள இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
பேஷன் குளோத்திங் டெக்னாலஜி, குளோத்திங் புரொடக்ஷன் டெக்னாலஜி, பேஷன் நிட்வேர் அன்ட் புரொடக்ஷன் டெக்னாலஜி ஆகிய ஓராண்டு கால படிப்பும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் இன் நிட்வேர் இன்டஸ்ட்ரி, மார்க்கெட்டிங் அன்ட் மெர்ச்சன்டைசிங் ஃபார் தி பேஷன் இன்டஸ்ட்ரி ஆகிய 6 மாத படிப்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளன
குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் கல்வி, சாதி, வருமானச் சான்றிதழ்களுடன் நவம்பர் 8ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 11ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 044- 22542755 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.