நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைநெறி கல்வி படிப்பில் சேருவதற்கான தேதி டிசம்பர் 1ஆம் தேதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று அப்பல்கலைக் கழக துணைவேந்தர் சபாபதிமோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி பாடத்தில் 2008-2009ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
பி.ஏ., எம்.ஏ., எம்.பி.ஏ. மற்றும் இதர பட்டயச்சான்றிதழ் வகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர்களின் நலன் கருதி, இந்த கல்வி பாடத்திட்டத்தில் சேருவதற்கான தேதி 1.12.2008 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.ஏ., பட்டப்படிப்பில் சேருவதற்கு ஏதேனும் ஒரு பட்டம் பெற்று இருக்க வேண்டும். நுழைவு தேர்வு கிடையாது. ஆண்டு கட்டணம் ரூ.9,300இல் இருந்து ரூ.7,500ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்கு சில பாட வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.100 ஆகும்.
விண்ணப்பங்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நாகர்கோவில் தென் திருவாங்கூர் இந்து கல்லூரி வளாகம் ஆகிய மையங்களில் கிடைக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.