11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் உயர் கல்வி கற்கும் மாணவர்களின் (18 முதல் 24 வயது வரை) விகிதத்தை 5 விழுக்காடு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் புரந்தேஸ்வரி நாடாளுமன்றத்தில் அண்மையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
இதற்கான உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், இத்திட்ட காலத்தில் பல்வேறு திட்டங்கள் வாயிலாக தரமான உயர் கல்வியை மாணவர்கள் பெறுவதற்காக ரூ.84,943 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
உயர்க் கல்வி துறைக்காக 2005-06இல் ரூ.1,817 கோடியும், 2006-07இல் ரூ.2,530 கோடியும், 2007-08இல் ரூ.6,483 கோடியும், 2008-09இல் ரூ.7,600 கோடியும் ஒதுக்கப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.