அயல்நாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப கல்வி வழங்க 56 இந்திய கல்வி நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர் புரந்தேஸ்வரி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், 6 அயல்நாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப கல்வி வழங்க ஏ.ஐ.சி.டி.இ.யில் 6 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் சுயநிதியாக இருந்து வரும் இந்திய பல்கலைக்கழகங்கள் அல்நாட்டு பல்கலைக் கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள அனுமதியளிக்கப்படும்.
இதற்கு மத்திய அரசு, மாநில அரசுகள் அல்லது பல்கலைக் கழக மானியக் குழு(யு.ஜி.சி.) யின் முன்அனுமதி தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.