பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி!
, செவ்வாய், 21 அக்டோபர் 2008 (18:49 IST)
தேசிய அளவில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சியளித்து வரும் டிரிம்பண்ட் இன்ஸ்டிடூய்ட் ஆப் மேனேஜ்மண்ட் எஜுகேசன் (T.I.M.E) என்ற தனியார் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 8,9 மற்றும் 10ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகளை நடத்த உள்ளது.நாடு முழுவதும் 30 நகரங்களில் இந்த வினாடிவினா (குயிஸ்) போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மண்டல அளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள், ஹைதராபாத்தில் நடைபெறும் தேசிய இறுதிப்போட்டியில் பங்கேற்று தேசிய பட்டத்தை வெல்வார்கள்.சென்னை மாணவர்களுக்கான இறுதிப்போட்டி வரும் 23ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தங்கள் பள்ளளியை பங்கேற்க செய்வதற்காக 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களை தயார்படுத்தி வருகின்றனர்.சென்னை மண்டலத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அணி தேசிய அளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளும்.இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் முதலில் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்படும் முதல்நிலை எழுத்துச் சுற்றில் பங்கேற்கும். இதன் மூலம் ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 5 அணிகள் நகர அளவில் நடத்தப்படும் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெறும்.ஒவ்வொரு நகரத்திலும் இருந்து வெற்றி பெறும் அணிகள் மண்டல அளவில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும்.ஒவ்வொரு மண்டல அளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றிப் பெறும் அணிகள் அடுத்த மாதம் (நவம்பர்) ஹைதராபாத்தில் நடக்கும் தேசிய அளவிலான இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெறும்.இந்த போட்டிக்கான மண்டல மற்றும் தேசிய அளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் மற்றும் உடன் வருபவர்களின் செலவினங்களை டைம் நிறுவனம் ஏற்றுக்கொள்ளூம்.இறுதிப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மெரிட் சான்றிதழ்களும் மற்றும் போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்களும் அந்தந்த பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுப் பணமும், ரூ.25,000 மதிப்புள்ள அன்பளிப்புகளும் வழங்கப்படும்.இந்தப்போட்டிகளில் கலந்து கொள்ள மேலாளர், வர்த்தக மேம்பாடு, டிரிம்பண்ட் இன்ஸ்டிடூய்ட் ஆப் மேனேஜ்மண்ட் எஜுகேசன் (T.I.M.E) , சென்னை என்ற முகவரியிலோ 9941908809 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.மேலும், [email protected] என்று ஈ-மெயில் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் தகவல் பெறலாம். போட்டி பற்றிய விவரங்களை www.time4education.com என்ற இணையதளம் வாயிலாகவும் தெரிந்துகொள்ளலாம்.