தமிழ் நாட்டிலுள்ள ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்பைத் தொடர விரும்பினால், இதற்கான செலவினங்கள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"தமிழ் நாட்டிலுள்ள ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்கள் அகில இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் (All India Entrance Test for MBBS/PG Diploma Course) கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இந்தியாவில் உள்ள எந்த ஒரு மாநிலத்திலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேற்கண்ட படிப்பைத் தொடர விரும்பினால், இதற்கான செலவினங்கள் அனைத்தையும் அரசே ஏற்கும்" என்று கூறப்பட்டுள்ளது.