Publish Date: Fri, 10 Oct 2008 (12:26 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் பி.எட். பயில விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுத்தேர்வு வரும் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இத்தேர்விற்கான நுழைவுச்சீட்டு முன்பாகவே மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதன் துணைவேந்தர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை நகர், சென்னை, கோவை, மதுரை திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் இத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.