Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒயர்லஸ் டெக்னாலஜி பாடம்: டெலிமேன் அறிமுகம்

ஒயர்லஸ் டெக்னாலஜி பாடம்: டெலிமேன் அறிமுகம்
, செவ்வாய், 7 அக்டோபர் 2008 (17:25 IST)
செல்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் அதிகரிப்பால் தொலைத் தொடர்புத் துறையில் பெருகியுள்ள வேலைவாய்ப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், டெலிமேன் கல்வி நிறுவனம் ஒயர்லஸ் டெக்னாலஜி என்ற புதிய பாடத்தைத் தொடங்குகிறது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் ரகு வாரியார் கூறியதாவது:

நாளுக்கு நாள் தொலைத்தொடர்புத்துறை வளர்ந்து வருவதால், மனித சக்தியின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஒயர்லஸ் டெக்னாலஜி என்ற புதிய பாடத்தை டெலிமேன் கல்வி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இப்பாடம் தொடர்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணிக்கு முந்தைய பயிற்சி அளிக்கப்படும். மின்னணுவியல், தொலைத்தொடர்பு பாடங்களில் பட்டம், டிப்ளமா முடித்தவர்கள் இதில் சேரலாம். பகுதி நேரம், முழு நேர வகுப்பாக இது இருக்கும்.

இவ்வாறு ரகு வாரியார் கூறினார்.

டெலிமேன் நிறுவனத்தின் டெல்லி மைய மூத்த பேராசிரியர் கவுரவ் குமார் கூறுகையில், தொலைத் தொடர்புத்துறையில் பெருகி வரும் சவால்களையும், தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் மாணவர்களை உருவாக்குவதே இதன் நோக்கம். ஒயர்லஸ் டெக்னாலஜியுடன் சிடிஎம்ஆ, டிடிஎம்ஏ, ஏஎம்பிஎஸ் போன்ற வேறு தொழில் நுட்பப் பாடங்களும் கற்பிக்கப்படுகிறது என்றார்.

செல்பேசி சாதனங்களில் அதிகரிப்பால் அத்துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. செல்பேசி பழுபார்ப்பு, அதன் தொழில் நுட்பம், உற்பத்தி, தரக்கட்டுப்பாடு உள்ளிட்டவைகளை, ஐடிஐ, டிப்ளமா, பட்டதாரிகள், மின்னணு பாடத்தை படித்த, படிக்காதவர்கள் கற்கும் வகையில் பிரத்யேகமாக வடிவைக்கப்பட்ட பாடங்களை (டிசிஎம்பி, டிசிஎம்ஆர்பி) டெலிமேன் அளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் மூலம் அவரவர் திறமை, தகுதி, வணிகம் புரியும் தன்மை ஆகியவற்றுக்கேற்ப இந்தியாவில் ரூ. 7,500, வெளிநாடுகளில் ரூ. 25,000 எனத் தொடங்கி, மாதந்தோறும் வருவாய் ஈட்டலாம்.

Share this Story:

Follow Webdunia tamil