Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடக்கப்பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம்!

தொடக்கப்பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம்!
, செவ்வாய், 7 அக்டோபர் 2008 (13:26 IST)
தொடக்கப்பள்ளிகளில் கற்பித்தல், கற்றல் முறையிலும், பாடத் திட்டத்திலும் விரைவில் பெரும் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

இதுகுறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்களில் கூறப்படுவதாவது: பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறையின் தரத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் புதிய பாடத் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இது விரைவில் வெளியிடப்படும்.

webdunia photoFILE
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக்குழு (என்.சி.இ.ஆர்.டி.), கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வு நடத்தி, புதிய பாடத்திட்டத்தை வகுத்துள்ளது. இதன்படி கற்பித்தல், கற்றல் முறை மாற்றப்பட்டு, மாணவர்களுக்கு களப் பரிசோதனைகள், பயிலரங்குகள் அதிகப்படுத்தப்படும்.

யுனெஸ்கோ, யுனிசெப், 5 மண்டல கல்வி நிலையங்கள், தொடர்புடைய மாநில திட்ட அலுவலகங்கள், மாநில கல்விக் குழுக்கள், மாவட்ட- ஒன்றிய அமைப்புகள், இளநிலை திட்ட பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் புதிய பாடத் திட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன் அடிப்படையில் வரைவு பாடப் புத்தகம் தயாரிக்கப்படு, தேர்ந்தெடுக்கப்பட்ட 160 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அவை அளிக்கப்பட்டு, திருத்தங்களும் கருத்துக்களும் கேட்கப்பட்டன.

பள்ளிகளிடம் பெற்றப்பட்ட, அவை வலியுறுத்திய கருத்துக்களின் அடிப்படையில் பாடத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் இந்நடவடிக்கை, கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கக் கல்வித்துறையால் தொடங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil