10 ஆம் வகுப்பு கணிதம், அறிவியல் பாடங்களில் கடினமாக உள்ள பகுதிகள் நீக்கப்படும் என்று தெரிகிறது.
எஸ்எஸ்எல்சி கணிதம், அறிவியல் பாடங்களில் சில பகுதிகள் கடினமான உள்ளதாக பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து இது குறித்து ஆராய 20 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையே கடினப் பகுதிகளை நீக்குவது பற்றிய ஆய்வுக்கூட்டம் சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எனினும் கணிதம்- அறிவியல் பாடங்களில் உள்ள கடினப் பகுதிகள் நீக்கப்படுவது குறித்து எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. அனேகமாக இன்னும் ஒரு மாதத்திற்குள், கடினப் பகுதிகள் நீக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.