Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேளாண் பல்கலையில் புதிய சான்றிதழ் படிப்புக்கள் அறிமுகம்!

வேளாண் பல்கலையில் புதிய சான்றிதழ் படிப்புக்கள் அறிமுகம்!
, வியாழன், 25 செப்டம்பர் 2008 (16:57 IST)
கோவை : வேளாண்சார் தொழில்நுட்பங்களில் 5 புதிய சான்றிதழ் படிப்புகளை கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், நில எழிலூட்டல், அலங்காரத் தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் தொழில்நுட்பம், வணிகரீதியிலான தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், நவீன களை மேலாண்மை, மண்வள மேலாண்மை ஆகிய சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகிறது.

வேளாண்சார் தொழில்களை துவங்கும் வகையில் இப்பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நவம்பரில் பாடங்கள் துவங்கப்படும்.

இந்த சான்றிதழ் படிப்புக்களில் ஆங்கிலத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் சேரலாம்.

இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் இயக்குநர், தொலைநிலைக் கல்வி இயக்ககம், வேளாண் பல்கலைக்கழகம், கோவை - 641003 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி எண்கள் 0422-6611229, 6611429

Share this Story:

Follow Webdunia tamil