Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணிதத்தில் பின்தங்கும் மாணவர்கள்!

கணிதத்தில் பின்தங்கும் மாணவர்கள்!
, வியாழன், 25 செப்டம்பர் 2008 (14:01 IST)
கணிதத்துறையில் முன்னோடியாகத் திகழ்ந்து வரும் இந்தியா, தற்போது மிகவும் பின்தங்கத் தொடங்கியுள்ளது. கணிதப் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சரியத் தொடங்கி உள்ளது.

பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தப் பெருமை நம் இந்தியாவுக்குச் சொந்தமானது. கணித மேதை ராமானுஜம் உள்ளிட்ட பல்வேறு மேதைகள் இத்துறையில் உலக அளவில் பிரகாசித்தனர்.

கணிதத்தில் மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது இந்தியா. மற்ற பாடங்களில் பின்தங்கும் மாணவர்கள் கூட கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்குவதைக் காண முடிகிறது.

ஆனால், தற்போது இந்திய மாணவர்களிடம் கணிதப்பாடம் மீது ஆர்வம் குறையத் தொடங்கியுள்ளது. தகவல் தொழில் நுட்பம் போன்ற வருவாய் அதிகம் ஈட்டும் துறைகள் மீது அவர்களின் கவனம் திரும்பி வருவதால், கணிதப் பாடங்களின் மீது இருந்த அக்கறை குறையத் தொடங்கியுள்ளது.

கணிதத்தின் மீதான ஆர்வம் குறைவதால், அந்த பாடத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் சரியத் தொடங்கியுள்ளது. இதை வெளிச்சம் போட்டுக் காட்டும் அபாய அறிவிப்பை பஞ்சாப் பல்கலைக்கழகம் நமக்கு உணர்த்தியுள்ளது.

பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (பி.டி.யூ.) கீழ் 66 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்மையில் பி.டி.யூ. நடத்திய தேர்வில் கணிதப் பாடங்களில் மட்டும் சுமார் 16,000 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

கணிதத்தில் பெறும்பாலானோர் 'கோட்டை' விட்டிருப்பது, பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்ல, அங்குள்ள கல்வியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

விப்ரோ, இன்போசிஸ், டி.சி.யூ. போன்ற முன்னணி நிறுவனங்கள் பி.டி.யூ. வில் இருந்து வளாகத் தேர்வு மூலம் மாணவர்களை பணியில் சேர்க்கின்றன. அந்நிறுவனங்களும், இந்த முடிவைப் பார்த்து கவலை கொண்டுள்ளன.

இந்தியாவில் கணிதப் புலிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவது கவலை தரும் ஒன்றாகும். இப்போதே விழித்துக் கொள்வது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil