Publish Date: Mon, 15 Sep 2008 (15:37 IST)
Updated Date: Mon, 15 Sep 2008 (15:36 IST)
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை இம்மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நடப்புக் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில், ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
எனினும், 10 ஆம் வகுப்பு உடனடித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், இதற்கான அனுமதி இம்மாதம் (செப்டம்பர்) 30 ஆம் தேதி வரை நீட்டித்து பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.