மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த ராணுவ சேவைகள் தேர்வு(II), ( Combined Defence Services Examination (II)) செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்வு நாடு முழுவதும் சென்னை உள்பட 41 மையங்களில் நடக்க உள்ளது. இதற்கான அனுமதிச் சான்றிதழ் தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், அதற்கான காரணத்துடன் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மேலும் விவரம் தேவைப்படுபவர்கள் புது டெல்லியில் உள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவி மையத்தை 011-23385271, 011-23381125, 011-23098594 என்ற தொலைபேசி எண்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
மேலும் 011-23387310 என்ற தொலைநகல் எண் மூலமாக தொலை நகல் (Fax) அனுப்பியும் கேட்டறியலாம். தேர்வு மையம் மற்றும் நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்களை தேர்வாணையத்தின் இணைய தளமான http://www.upsc.gov.in மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.