Publish Date: Tue, 09 Sep 2008 (16:34 IST)
Updated Date: Tue, 09 Sep 2008 (16:30 IST)
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு வகுப்புகளை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி, மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து இன்று போராட்டம் செய்தனர்.
அரியலூரில் பல ஆண்டுகளாக அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்குப்பின் தொடங்கப்பட்ட பல்வேறு கல்லூரிகளில் பட்ட மேற்படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இங்கு அதற்கான வசதிகள் இன்னும் கொண்டு வரப்படவில்லை.
இந்நிலையில் அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பட்ட மேற்படிப்புகளை உடனடியாக அறிமுகம் செய்யக் கோரியும், ஆசிரியர்கள் இல்லாத துறைகளில் காலி இடங்களை உடனடியாக நிரப்பக் கோரியும் மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர்.
தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாக மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.