Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய பொறியியல் கல்லூரிகளில் வகுப்பு தொடக்கம்!

Advertiesment
புதிய பொறியியல் கல்லூரிகளில் வகுப்பு தொடக்கம் புதிய பொறியியல் கல்லூரி விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழகம்
, திங்கள், 8 செப்டம்பர் 2008 (13:48 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தால் விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய அரசு பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகின்றன.

விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, புதிய வகுப்புகளை தொடங்கி வைக்கவுள்ளதாக, அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர், விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிசாமி உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் புதிதாக 6 அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்பது நினைவுகூறத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil