மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில், நடப்பு கல்வியாண்டில் எம்.எட். படிப்பில் சேர தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, அப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில், 2008- 2009 ஆம் கல்வியாண்டில் எம்.எட். படிப்பில் சேர தகுதியுள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில் சேருவதற்கு பி.எட். படிப்பில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் எனில், தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. விண்ணப்பத் தொகை ரூ. 200.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் (ஆகஸ்ட்) 25-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
இவ்வாறு பதிவாளர் அறிவித்துள்ளார்.