Publish Date: Tue, 19 Aug 2008 (13:22 IST)
Updated Date: Tue, 19 Aug 2008 (13:22 IST)
கல்லூரி விரிவுரையாளர் பணி நியமனம் தொடர்பாக, 20ஆம் தேதி நடக்க இருந்த நேர்முகத் தேர்வு 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள், நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதில் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பிரிவினருக்கு 20ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடக்க இருந்தது. இந்த நேர்முகத் தேர்வு பல்வேறு காரணங்களால் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இடம், நேரம் மற்றும் குழு ஆகியவை ஏற்கனவே அறிவித்துள்ளபடிதான் இருக்கும். 22ஆம் தேதிதான் கடைசி நாள் என்பதால் நேர்முகத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த அறிவிப்பையே அதிகாரப்பூர்வமான அழைப்புக் கடிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்லை" என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.