Publish Date: Wed, 13 Aug 2008 (14:49 IST)
Updated Date: Wed, 13 Aug 2008 (14:47 IST)
பீடி, திரைப்படத் தொழில், சுரங்கத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் 2008-09 ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தொழிலாளர் நலம், வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பீடி, திரைப்படத் தொழில், சுரங்கத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான 2008-09 ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற உரிய விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுகின்றன
விண்ணப்பப் படிவங்கள் அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் அந்தந்த கல்வி நிறுவனங்களின் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். பள்ளி, கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிப்பவர்கள் 31ஆம் தேதிக்குள்ளும், தொழில்நுட்ப கல்லூரிகளில் படிப்பவர்கள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்கலாம்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் (சுரங்கம், திரைப்பட தொழிலாளர்கள் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்) திருநெல்வேலி, ஹைகிரவுண்டு செயிண்ட்தாமஸ் ரோட்டில் உள்ள இந்திய அரசு தொழிலாளர் நலம், வேலைவாய்ப்பு அமைச்சகத்தையும், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த பீடித் தொழிலாளர்கள் குடியாத்தம் பேரணாம்பட்டுவில் உள்ள பீடித் தொழிலாளர் நல மருந்தகத்தையும் அணுகலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.