Publish Date: Thu, 07 Aug 2008 (12:30 IST)
Updated Date: Thu, 07 Aug 2008 (12:29 IST)
பள்ளிக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ஆங்கிலப் பாட முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 9ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள மாகாண மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு இந்த கலந்தாய்வு நடக்கிறது.
ஆங்கிலம் ஒரே பாடம், ஆங்கிலம் வெவ்வேறு பாடங்களுக்கான ஆசிரியர் தலா 45 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக இந்த கலந்தாய்வு நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.