Publish Date: Thu, 07 Aug 2008 (12:28 IST)
Updated Date: Thu, 07 Aug 2008 (12:28 IST)
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தெரிவுப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பி.ஏ. ராமையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2007-08, 2008-09ஆம் ஆண்டுகளில் அரசு மேல்நிலை பள்ளிகள், மாநகராட்சி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்துப் பாடங்களுக்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி கடந்த ஜூன் 16ஆம் தேதி வரை நடைபெற்றது.
இப் பணியிடங்களுக்கான தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அது பற்றிய தகவல் தனித்தனியே அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.