Newsworld Career Education 0808 01 1080801019_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிலஅளவையாளர் தேர்வு: நுழைவு‌ச்‌சீ‌ட்டு கிடைக்காதவர்களுக்கு மாற்று ஏற்பாடு!

Advertiesment
நிலஅளவையாளர் வரைவாளர் நுழைவு‌ச்‌சீ‌ட்டு சான்றொப்பம்
, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (12:17 IST)
த‌மி‌ழ்நாடஅரசு‌பப‌ணியாள‌ரதே‌ர்வாணைய‌ம் நடத்த உள்ள நிலஅளவையாளர், வரைவாளர் ப‌ணி‌ததேர்வுக்காநுழைவு‌ச்‌சீ‌ட்டகிடைக்கப் பெறாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாஅ‌த்தே‌ர்வாணைதே‌ர்வக‌ட்டு‌ப்பா‌ட்டஅ‌திகா‌ரி லா‌ல்வேனதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுதொடர்பாக அவ‌ரவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "த‌மி‌ழ்நாடஅரசு‌பப‌ணியாள‌ரதே‌ர்வாணைய‌ம் குரூப்-4இல் அடங்கிய நிலஅளவையாளர், வரைவாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு வரு‌ம் 10ஆ‌ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 104 மையங்களில் நடைபெற உள்ளது.

இ‌த்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் தேர்வு மைய விவரம், ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் த‌மி‌ழ்நாடஅரசு‌பப‌ணியாள‌ரதே‌ர்வாணைய‌ இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

நுழைவு‌ச்‌சீ‌ட்டு‌ம், விண்ணப்ப நிராகரிப்பு விளக்கமும் தபால்மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்து 7ஆ‌ம் தேதி வரை எவ்வித தகவலும் பெறாதவர்கள் அல்லது இணையதளத்தில் பெயர் இடம்பெறாதவர்களுக்கு நுழைவு‌ச்‌சீ‌ட்டு‌ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 8, 9ஆ‌மதேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள த‌மி‌ழ்நாடஅரசு‌பப‌ணியாள‌ரதே‌ர்வாணைய‌ அலுவலகத்தையும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தையும் அணுகி நுழைவு‌ச்‌சீ‌ட்டை‌ப் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு மாற்று நுழைவு‌ச்‌‌சீ‌ட்டஅல்லது தற்காலிக நுழைவு‌ச்‌சீ‌ட்டை‌ப் பெற வரும் விண்ணப்பதாரர்கள் ஒரு வெள்ளைத்தாளில் போட்டோ ஓட்டி அதில் அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற்று ஒரு கோரிக்கை கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

சரியான நேரத்தில் விண்ணப்பம் அனுப்பியதற்கான ஆதாரம் கேட்கப்பட்டால் அதை காண்பிக்க தயாராக இருக்க வேண்டும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம் குறித்து மறுபரிசீலனை செய்யவோ, தேர்வு மையம் மற்றும் முகவரி மாற்றம் குறித்த கோரிக்கையோ ஏற்கப்படாது" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil