Publish Date: Wed, 30 Jul 2008 (14:43 IST)
Updated Date: Wed, 30 Jul 2008 (14:42 IST)
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், இளங்களை, முதுநிலை பட்டப்படிப்பு, பட்டய, சான்றிதழ் படிப்புகளில் சேர தாமத கட்டணத்துடன் விண்ணப்பம் செய்ய நாளை கடைசி நாளாகும் என்று அப்பல்கலைக்கழக இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதற்கான விண்ணப்பத்தை சென்னை தரமணியில் உள்ள இக்னோ பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தில் நேரிலோ அல்லது பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து இறக்குமதி செய்தோ பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தாமதக் கட்டணம் ரூ.200 உடன் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பல்கலைக்கழக படிப்புகளில் சேர ஜூலை 15ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க நாளை 31ஆம் தேதி வரை கடைசி நாளாக நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய 044-22542727, 22541919 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.