Publish Date: Wed, 30 Jul 2008 (12:16 IST)
Updated Date: Wed, 30 Jul 2008 (12:15 IST)
கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கான இரண்டு நாள் கலந்தாய்வு சென்னையில் நாளை துவங்குகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் கால்நடை மருத்துவம், மீன்வளம், உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை, ஜூலை 31 ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை இரண்டு நாட்கள் நடக்கிறது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதங்கள் ஏற்கனவே பல்கலைக்கழகத்தால் அனுப்பப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு மேல் (கட் ஆப்) பெற்ற தகுதியுடைய மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இதுபற்றிய மேலும் விவரங்கள் அறிய தலைவர், தேர்வுக்குழு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-51 என்ற முகவரியில் நேரிலோ, 044-25551586 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.