Publish Date: Wed, 30 Jul 2008 (12:00 IST)
Updated Date: Wed, 30 Jul 2008 (11:59 IST)
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழையும் இன்றே பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த ஜூலை மாதம் நடந்த இந்த சிறப்பு துணைத்தேர்வில் தமிழகம் முழுவதும் இருந்து 25,000 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இதற்கான தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இன்றே மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.
மறுகூட்டல் செய்யவும், விடைத்தாள் நகல் பெறவும் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
இந்த விண்ணப்பங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.