Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவ‌ல் ப‌ணி‌க்கான எழு‌த்து‌‌த் தே‌ர்வு: காஞ்‌சிபுரத்தில் 4,039 பே‌ர் எழுது‌கி‌ன்றன‌ர்!

Advertiesment
காவ‌ல‌ர் எழு‌த்து‌‌த் தே‌ர்‌வு‌ கா‌ஞ்‌சிபுர‌‌‌ம் கே.பெரியய்யா
, செவ்வாய், 29 ஜூலை 2008 (13:40 IST)
வரு‌ம் 3ஆ‌மதே‌தி நடைபெஉ‌ள்ள 2 ஆ‌ம் ‌நிலகாவ‌ல‌ரப‌ணி‌க்காஎழு‌த்து‌‌ததே‌ர்‌வு‌க்ககா‌ஞ்‌சிபுர‌‌த்‌தி‌ல் 4,039 பே‌ரு‌க்கஅழை‌ப்பு‌ககடித‌மஅனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளதாஅ‌ம்மாவ‌ட்காவ‌ல்துறக‌ண்கா‌ணி‌ப்பாள‌ரகே.பெரியய்யா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2ஆ‌ம் நிலை காவலர் பணிக்கு காஞ்‌சிபுரத்தில் இருந்து விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த மாதம் 3ஆ‌ம் தேதி காலை 9 மணிக்கு காஞ்‌சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் முதல் கட்ட எழுத்துத் தேர்வு நடக்கிறது.

இதில் 3,625 ஆண்களும், 414 பெண்களும் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வுக்கான அழைப்பு கடிதங்கள் அவரவர் முகவரிக்கு கடந்த 17ஆ‌ம் தேதி அனுப்பப்பட்டு விட்டது.

எனினும் அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் காஞ்‌சிபுரத்தில் உள்ள மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் தேர்வு எழுத வருபவர்கள் தேர்வு அட்டை எடுத்து வர வேண்டும். கண்டிப்பாக செல்பே‌சியை யாரும் தேர்வு மையத்துக்குள் எடுத்து வரக்கூடாது எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil