Publish Date: Mon, 28 Jul 2008 (18:40 IST)
Updated Date: Mon, 28 Jul 2008 (18:39 IST)
நாடு முழுவதும் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (என்.ஐ.டி.), தகவல் தொழில் நுட்பக் கல்விக் கழகம் (ஐ.ஐ.ஐ.டி), நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பி.இ., பி.டெக், பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 8-வது அகில இந்தியப் பொறியியல், கட்டிடக்கலை நுழைவுத் தேர்வு 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடக்கவுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின்படி இத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Mon, 28 Jul 2008 (18:40 IST)
Updated Date: Mon, 28 Jul 2008 (18:39 IST)