Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவ‌ல் ‌துறை ப‌ணி‌க்கான தேர்வு: சென்னையில் 9 மையங்களில் நடக்கிறது!

காவ‌ல் ‌துறை ப‌ணி‌க்கான தேர்வு: சென்னையில் 9 மையங்களில் நடக்கிறது!
, செவ்வாய், 29 ஜூலை 2008 (13:21 IST)
வரு‌மஆகஸ்‌‌் 3ஆ‌ம் தேதி ந‌ட‌க்க உ‌ள்காவ‌லதுறப‌ணி‌க்காஎழுத்துத் தேர்வு சென்னையில் 9 மையங்களில் நடைபெறுகிறது எ‌ன்று த‌மி‌‌ழ்நாடு ‌சீருடப‌‌ணியாள‌ரதே‌ர்வு‌க்குழும‌‌மசெ‌ன்னமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொடர்பாதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சென்னை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2007ஆ‌ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் 5, 959 இரண்டாம் நிலை காவலர் (ஆண், பெண்) பதவிக்கு சென்னையில் இருந்து விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு ஆக‌ஸ்‌ட் 3ஆ‌மதே‌தி காலை 10 மணிக்கு கீழ்கண்ட தேர்வு மையங்களில் முதல்கட்ட தேர்வாக எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

எஸ்.பி.ஓ.ஏ.பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக்குலேஷன் பள்ளி, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், லயோலா கல்லூரி, குளக்கரை சாலை, நுங்கம்பாக்கம், நல்ல மேய்ப்பர் நல்லாயன் மேல்நிலைப்பள்ளி, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், மாநில கல்லூரி, காமராஜர் சாலை, எத்திராஜ் பெண்கள் கல்லூரி, எத்திராஜ் சாலை, எழும்பூர், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, அண்ணாசாலை, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளி சாலை (ராஜாஜி சாலை) நுங்கம்பாக்கம், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளிசாலை (ராஜாஜி சாலை) நுங்கம்பாக்கம் ஆ‌கிய மைய‌ங்க‌ளி‌ல் நடைபெற உ‌ள்ளது.

இத்தேர்வில் கலந்து கொள்ள 8,799 விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக்கடிதம் ஏற்கனவே தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் 3ஆ‌ம் தேதி காலை 9 மணிக்கு எழுத்துத் தேர்வுக்கு அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் தவறாது ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தேர்வுக்கு வரும் முன் அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் படித்து தெரிந்து கொண்டு தேர்வுக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil