Publish Date: Fri, 25 Jul 2008 (15:20 IST)
Updated Date: Fri, 25 Jul 2008 (15:19 IST)
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் வாரியத்தின் மூலம், வரும் 3ஆம் தேதி காவல்துறை பணிக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நடக்க உள்ளது.
தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள இந்த எழுத்து தேர்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்படுகிறது. தேர்வுக்கான நுழைவு அனுமதி அட்டை தேர்வாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வுக்கு வரக்கூடியவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த நுழைவு அனுமதி அட்டையை தவறாமல் கொண்டு வரவேண்டும். எந்த காரணத்தை கொண்டும் தேர்வின் போது செல்பேசி பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக, காவல் துறை பணிக்கு உடல்தகுதி தேர்வுக்கு பின்னர் தான் எழுத்து தேர்வு நடத்தப்படும். ஆனால் தற்போது முதலில் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்துத் தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு பின்னர் உடல் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.