சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளில் அறிவியல் கூடங்கள் அமைப்பதற்காக ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
திருப்பத்தூர், சிங்கம்புணரி ஒன்றியங்களில் உள்ள 6 பள்ளிக் கூடங்களில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் கட்டடத்தை திறந்து வைத்து பேசுகையில், " நபார்டு வங்கி மூலம் சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.7 கோடி மதிப்பில் கூடுதல் பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு அனைத்து கல்வித் திட்டத்தின் சார்பில் சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு அறிவியல் கூடம், அறிவியல் உபகரணங்கள் மற்றும் கல்வி உபகரணங்களுக்காக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.