Publish Date: Tue, 22 Jul 2008 (15:08 IST)
Updated Date: Tue, 22 Jul 2008 (15:08 IST)
ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அறிவியல் பிரிவு மாணவிகளுக்கு திருவல்லிக்கேணி என்.கே.டி. ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் வரும் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடக்கிறது.
கலைப்பிரிவு மாணவர்களுக்கு, நுங்கம்பாக்கம் கல்வித் தொலைக்காட்சி படப்பதிவு நிலையத்தில் 25,28 ஆகிய இரு தேதிகளிலும், மாணவிகளுக்கு, வேப்பேரி கிறிஸ்டோபர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 25ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தொழிற்பாடப் பிரிவு மாணவர்களுக்கு, திருவல்லிக்கேணி மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 28ஆம் தேதியும், மாணவிகளுக்கு அசோக்நகர் ஸ்டெல்லா மெட்டிட்யூனா ஆரிரியர் பயிற்சி கல்லூரியில் 28, 29 ஆம் தேதியிலும் கலந்தாய்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.