10-ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ஓராண்டு துணை செவிலியர் பயிற்சி அளிக்கும் திட்டத்தை சென்னை ஹரிஜன சேவா சங்கம் நடத்துகிறது.
இதற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விண்ணப்ப விநியோகம் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேர்முகத் தேர்வு ஜூலை 23-ம் தேதி நடைபெறுகிறது.
ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு கட்டணச் சலுகை உண்டு.
மேலும் விவரங்கள் அறிய, எஸ்.ஆர்.எஸ். சர்வோதய மாணவியர் விடுதி, 77, மென்க்னிகல்ஸ் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை-31. தொலைபேசி-28360193 என்ற முகவரியை அணுகவும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.