Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவ தரவ‌ரிசை பட்டியல் வ‌ெ‌ளி‌யீடு

மருத்துவ தரவ‌ரிசை பட்டியல் வ‌ெ‌ளி‌யீடு
, சனி, 28 ஜூன் 2008 (10:33 IST)
மருத்துவ படிப்புக்கான தரவ‌ரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 9 பேர் 200-க்கு 200 கட் ஆப் ம‌தி‌ப்பெ‌ண்க‌ள் பெற்று முதல் இடத்தை பிடித்து‌ள்ளனர்.

மருத்துவ க‌ல‌‌ந்தா‌ய்வு ஜுலை மாதம் 4-ந் தேதி தொடங்குகிறது.

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். (பல் மருத்துவம்) மருத்துவ படிப்புக்கான தரவ‌ரிசை பட்டியலை நேற்று சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் வெளியிட்டார்.

இதில் 200-க்கு 200 கட் ஆப் மார்க் பெற்று 9 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். இவர்களில் பலர் பொறியியல் படிப்புக்கான தரவ‌ரிசை பட்டியலிலும் முன்னணியில் உள்ளனர்.

முத‌லிட‌ம் பெ‌ற்றவ‌ர்‌க‌ளி‌ன் விவரம் :

1. சோனு ராஜன், சென்னை, 2. எஸ்.வி.மனோஜ் குமார்,ஈரோடு மாவட்டம். (பொறியியலில் 2-ம் இடம்), 3. வி.அருண், செங்கல்பட்டு (பொறியியலில் 3-ம் இடம்) 4. டி.தினேஷ், கிருஷ்ணகிரி மாவட்டம். (பொறியியலில் 4-ம் இடம்), 5. எஸ்.வெங்கடேஷ், கும்பகோணம் (பொறியியலில் 5-ம் இடம்), 6. கே.கமலகுமார், புளியங்குடி, 7. ஏ.எம்.விக்னேஷ், திருநெல்வேலி (பொறியியலில் 8-ம் இடம்), 8. இ.மனோஜ் குமார், புதுக்கோட்டை மாவட்டம். (பொறியியலில் 9-ம் இடம்) 9. ஐ.வி.பிரியம்வதா, கோபிசெட்டிப்பாளையம்.

தரவ‌ரிசை‌ப் ப‌ட்டியலை வெ‌ளி‌யி‌ட்ட ‌பி‌ன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்காக விண்ணப்பித்தவ‌ர்க‌ளி‌ல் தகு‌திய‌ற்றவ‌ர்க‌ள் த‌விர ‌மீத‌மிரு‌க்கு‌ம் 11,687 மாணா‌க்க‌ர்களு‌க்கான தரவ‌ரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில் இதர வகுப்பினருக்கான கட் ஆப் மதிப்பெண் 197.25. மற்ற பிரிவினருக்கு கட் ஆப் மதிப்பிட இன்னும் சில நாட்கள் ஆகும்.

மருத்துவ படிப்புக்கான முத‌ற்கட்ட கல‌ந்தா‌ய்வு ஜுலை மாதம் 4-ந் தேதி தொடங்கி 9-ந் தேதி வரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது. தரவ‌‌ரிசை அடிப்படையில் ஒவ்வொருக்கும் த‌னி‌த்த‌னியாக கடிதங்கள் அனுப்பப்படுகிறது. இட ஒதுக்கீடு விதிப்படி கல‌ந்தா‌ய்‌வி‌ல் இடங்கள் ஒதுக்கப்படும்.

மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கல‌‌ந்தா‌ய்வு நடக்கும் தேதி இணையதளத்திலும், பத்திரிகை வாயிலாகவும் வெளியிடப்படும்.

அவ‌ர்களு‌க்கான கல‌ந்தா‌ய்வு அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம் நா‌‌ளி‌ல் மாணா‌க்க‌ர்க‌ள், உ‌ரிய சான்றிதழ்களுடன் கல‌ந்தா‌ய்‌வி‌ல் கலந்து கொள்ளலாம்.


Share this Story:

Follow Webdunia tamil