Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு ஒதுக்கீடு : க‌ல்லூரியிலும் பணம் கட்டலாம்

அரசு ஒதுக்கீடு : க‌ல்லூரியிலும் பணம் கட்டலாம்
, வெள்ளி, 27 ஜூன் 2008 (12:04 IST)
இ‌ந்த ஆ‌ண்டு‌ம் தனியார் பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகளில் அரசுக்கு 65 சதவீத இடஒதுக்கீடு உண்டு. இந்த கல்லூரிகளில் சேருவோர் கட்டணத்தை வங்கியில் மட்டுமின்றி கல்லூரியிலு‌ம் கூட செலு‌த்தலா‌ம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டை போலவே அரசு ஒதுக்கீட்டுக்கு 65 ‌விழு‌க்காடு இடங்கள் இந்த ஆண்டும் நிச்சயம் உண்டு. தனியார் கல்லூரிகள் 35 ‌விழு‌க்காடு இடத்தை நிரப்பிக் கொள்ளலாம். பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 278 கல்லூரிகளில் இருக்கும் மொத்த இடங்கள் 1 லட்சத்து 11,124 ஆகும். அதில், 69 ஆயிரத்து 731 இடங்கள் கல‌ந்தா‌ய்வு மூலமாக நிரப்பப்படும். மீதமுள்ள இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும். சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு நிர்வாகத்துக்கு அளிக்கப்படும். அரசு ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் ஒதுக்கப்படவேண்டும்.

அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள், கட்டண தொகையான ரூ.32,500-ஐ அண்ணா பல்கலைக்கழக வங்கி கவுண்ட்டரில் மட்டுமின்றி, அவரவர் ஊர்களில் உள்ள வங்கிகளிலும் கட்டிக் கொள்ளலாம். இதுதவிர, விருப்பமுள்ள மாணவர்கள் அந்தந்த கல்லூரியிலும் கூட கட்டணத்தை கட்டிக் கொள்ளலாம். கல்விக்கட்டணத்தில் இந்த ஆண்டில் மாற்றம் ஏதும் இருக்காது எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.


Share this Story:

Follow Webdunia tamil