Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவில் என்ஜினீயரிங் பட்டயப் படிப்பு

Webdunia
வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், சிவில் என்ஜினீயரிங் பட்டயப் படிப்பை இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.

இதுகுறித்து அதன் சென்னை மண்டல மையத்தின் இயக்குநர் டி.ஆர். ஸ்ரீநிவாசன ் கூறுகை‌யி‌ல், பொறியியல் துறையினைச் சார்ந்த கட்டுமானத் துறையில் ஒரு பட்டயப் படிப்பாக டிப்ளமோ இன் சிவில் என்ஜீனியரிங் படிப்பு தொடங்கப்படுகிறது.

10- ம் வகுப்பில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றவர் க‌ள் அல்லது மேலு‌ம் 2 ஆண்டுகள் கட்டுமானத் தொழிலக அனுபவம் பெற்றவர் களு‌ம் இ‌ந்த ப‌ட்டய‌ப்படி‌ப்‌பி‌ற்கு விண்ணப்பிக்க தகு‌தியானவ‌ர்க‌ள்.

இதுதவிர பிளஸ் 2 பாடப் பிரிவில் அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தவர்களோ அல்லது ஐடிஐ-ல் முதற்படி வரைகலை படிப்பில் (டிராஃப்ட்ஸ்மேன்ஷிப்) முதன்மைப் பாடமாக எடுத்து சான்றிதழ் பெற்றவர்களோ அல்லது மத்திய, மாநில அரசுகளின் கட்டுமானத் துறைகளில் பணியாற்றுவ ோரு‌ம ் விண்ணப்பிக்கலாம்.

பொது அல்லது தனியார் சார்ந்த கட்டுமான நிறுவனங்கள், இதுபோன்ற தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றுவோரும் இப்படிப்பில் சேரலாம்.

வரும் ஜூலை முதல் துவ‌ங்கு‌ம் இப்படிப்பின் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம், சென்னை மண்டல அலுவலகம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை 600113.

மேலும் விவரங்களை அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொ.பே. எண் 044-22541919. இ‌க்னோசெ‌ன்னை.ஏ‌சி.இ‌ன் எ‌ன்ற இணையதள முகவ‌ரி‌யிலு‌ம் ‌விவர‌ங்களை அ‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments