Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்வி நிலையங்களுக்கு வருமான வரி!

கல்வி நிலையங்களுக்கு வருமான வரி!
, புதன், 21 மே 2008 (12:46 IST)
கல்வி நிலையங்களின் வருமானத்தின் மீது, வருமான வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது.

தற்போது கல்வி நிலையங்கள் வருமான வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவை பல முறைகேடுகளை செய்து, வருமான வரி கட்டாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் வருமான வரித்துறை செய்த ஆய்வில் இருந்து, வரிஏய்ப்பு செய்த பட்டியலில் கல்வி நிலையங்களும் இடம் பெற்றுள்ளன. சென்ற நிதி ஆண்டில் கல்வி நிலையங்கள் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் ரூ.3,400 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரிதுறை கணக்கிட்டுள்ளது.

1961 ஆம் வருட வருமானவரி சட்டம் பிரிவு 10 (23) (சி) கீழ், இலாப நோக்கி இல்லாத, கல்வியை சேவையைக செய்யும் கல்வி நிறுவனங்கள் வருமான வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கபபட்டுள்ளது.

இந்த சட்டத்தின் படி கல்வி நிலையங்களை நடத்தும் அறக்கட்டளைகள், இதிலிருந்து வரும் வருமானத்திற்கு, வருமான வரி கட்ட தேவையில்லை. ஆனால் சில அறக்கட்டளைகள், இதிலிருந்து வரும் வருவாயை மற்ற துறைகளுக்கு திருப்பி விடுகின்றன. இதன் மூலம் வருமான வரி கட்டாமல் இருக்கின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

கல்வி நிலையங்கள் மாணவர்களிடம் இருந்து நன்கொடை பெறுகின்றன. இவை எப்போதுமே கணக்கில் காட்டப்படுவதில்லை. இத்துடன் காப்பீடேஷன் கட்டணம், நிர்வாக கட்டணம் போன்று பல்வேறு பெயர்களில் மாணவர்களிடம் வசூல் செய்கின்றன.

இந்த மாதிரி பல்வேறு பெயர்களில், மாணவர்களிடம் இருந்து வசூல் செய்யும் பணத்திற்கும், கல்விக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இவை மற்ற லாப நோக்கத்திற்காகவும், சொந்த தொழிலுக்காகவும் பயன்படுத்துகின்றன என்று தெரிய வந்திருப்பதாக வருமானவரி துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil