Newsworld Career Education 0805 10 1080510008_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவ படி‌ப்பு‌க்கு ஜூன் 3ஆ‌ம் தேதி முதல் விண்ணப்பம்!

Advertiesment
மருத்துவ‌ம் பல் மருத்துவ படி‌ப்பு‌ ‌வி‌‌ண்ண‌ப்ப‌ம் தரவ‌ரிசை பட்டியல் மாநில மருத்துவக் கல்வி இயக்குனர் டி.பி.கலாநிதி பொறுப்பு
, சனி, 10 மே 2008 (10:53 IST)
மருத்துவ‌மற்றும் பல் மருத்துவ படி‌ப்பு‌க்கான ‌வி‌‌ண்ண‌ப்ப‌மஜூன் 3ஆ‌மதேதி முதல் வழங்கப்பட உள்ளது. தரவ‌ரிசபட்டியல் ஜூலை 1‌ஆ‌மதேதி வெளியிடப்படுகிறது.

இதுதொடர்பாக மாநில மருத்துவக் கல்வி இயக்குனர் (பொறுப்பு) மரு‌த்துவ‌ரடி.பி.கலாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2008-09ஆம் ஆண்டுக்கான மருத்துவம், பல் மருத்துவ பட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் ஜூன் 3ஆ‌மதேதி முதல் வழங்கப்பட உள்ளன. விண்ணப்பம் பெற கடைசி நாள் ஜூன் 17ஆ‌மதேதி பிற்பகல் 3 மணி ஆகும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜூன் 17ஆ‌மதேதி மாலை 5 மணிக்குள் மருத்துவ தேர்வுக்குழு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் தரவ‌ரிசபட்டியல் ஜூலை 1ஆ‌மதேதி வெளியிடப்படும். மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கவுன்சிலிங் ஜூலை 8ஆ‌மதேதி தொடங்கி, 16ஆ‌மதேதி வரை நடைபெறும்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இயங்கி வரும் மருத்துவ தேர்வுக்குழு அரங்கில் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த கவுன்சிலிங் மூலம் 1,398 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், 251 இடங்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் நிரப்பப்படும். மேலும் 85 பி.டி.எஸ். இடங்கள் சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியிலும், 765 சீட்டுகள் தனியார் பல் மருத்துவ கல்லூரிகளிலும் நிரப்பப்படும் எ‌ன்றமரு‌த்துவ‌கக‌ல்‌வி இய‌க்குன‌ரகலா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil