இந்தியாவிலேயே சிறந்த ஆங்கிலப் பேச்சாளரைத் தேர்வு செய்யும் போட்டிகளை சென்னையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பயிற்சித்துறை (ESLO) நடத்துகிறது.
இப்போட்டிகளில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வணிக ஆங்கிலச் சான்றிதழ் (BEC) பெற்ற மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் சார்பில் கடந்த ஆண்டு (2007) நவம்பர் மாதம் நடத்தப்பட்ட வணிக ஆங்கிலச் சான்றிதழ் (BEC) தேர்வில் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 38 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இவர்களில் தலைசிறந்த பேச்சாளரைத் தேர்வு செய்வதற்கான மண்டல அளவிலான முதல் இறுதிப் போட்டிகள், வருகிற 10 ஆம் தேதி சனிக்கிழமை அண்ணாசாலையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலில் நடக்கிறது.
வணிக ஆங்கிலச் சான்றிதழ் தேர்வுகளில் முதல்நிலையை மட்டும் எழுதியவர்களில் முதல் 10 மாணவர்களும், உயர்மட்டத் தேர்வுகளை எழுதியவர்களில் முதல் 10 மாணவர்களும் சென்னையில் நடக்கவுள்ள மண்டல அளவிலான முதல் இறுதிப் போட்டிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போட்டிகளில் ஒரு பகுதியாக, இந்த 20 மாணவர்களும் முன்னமே தாங்கள் தயாரித்த உரையை வழங்க வேண்டும். அவற்றின் மீது நடுவர் குழு எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளித்த பிறகு, தங்களின் உரையைத் தொடரலாம்.
வணிக ஆங்கிலச் சான்றிதழ் தேர்வுகளில் முதல்நிலை எழுதியவர்களுக்கும், உயர்மட்டத் தேர்வுகளை எழுதியவர்களுக்கும் ஒரே நேரத்தில் இருவேறு போட்டிகள் நடக்கும்.
இந்தப் போட்டிகளில் இருபிரிவிலும் வெற்றிபெறும் இரண்டு பேர், மற்ற மண்டலங்களில் வெற்றிபெற்றவர்களோடு இணைந்து அகில இந்திய அளவில் நடக்கும் இறுதிப் போட்டிகளுக்கு அழைக்கப்படுவார்கள்.
போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பரிசுகள் நிச்சயம் என்றாலும், தேசிய அளவிலான இறுதிப் போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு கிடைப்பதாவது:
1)சிங்கப்பூரில் ஒரு சர்வதேச நிறுவனத்தில் MBA படிக்கும் வாய்ப்பு.
2)லண்டன், யுனைட்டட் கிங்டம், பெர்த் மற்றும் ஆஸ்ட்ரேலியாவில் குறுகிய காலப் படிப்புகள்.
3)மடிக்கணினிகள் உள்ளிட்ட 9,00 பரிசுகளில் ஒன்று.
மேலும் விவரங்களுக்கு அணுகவும்:
1) பிரிட்டிஷ் கவுன்சில், 737 அண்ணாசாலை, சென்னை- 600 002.
2) 4205 0600 என்ற எண்ணை அழைக்கவும்.