Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் ஸ்டெம்செல் ஆய்வுக் கல்வி அறிமுகம்!

சென்னையில் ஸ்டெம்செல் ஆய்வுக் கல்வி அறிமுகம்!
, திங்கள், 21 ஏப்ரல் 2008 (20:30 IST)
நிசி-இன் மறு உருவாக்க மருத்துவ மையம் (என்.சி.ஆர்.என்.) ஆச்சார்யா நாகார்ஜுனா பலகலைக் கழகத்துடன் இணைந்து ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் முதன் முதலாக சென்னையில் பி.எச்.டி. ஆய்வை அறிமுகம் செய்துள்ளது.

இதில் சேர்ந்துள்ள மருத்துவர்கள், விஞ்ஞானிகள் இணைந்து கல்லீரல் ஸ்டெம் செல்கள் மற்றும் ரத்த செல்களை உருவாக்கும் ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

இந்த ஆய்வின் மூலம் சிகிச்சைகள் பலனளிக்காத பல நோய்களுக்கு தீர்வு காணலாம் என்று என்.சி.ஆர்.எம். இயக்குனர் டாக்டர். சாமியேல் ஆப்ரகாம் தெரிவித்தார். இந்த ஆராய்ச்சிக் கல்விக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகார்ஜுனா பல்கலைக் கழகத்துடன் தீவிரமாக உரையாடல் மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் தற்போது இந்த 3 ஆண்டு ஆராய்ச்சிப் பட்டப்படிப்பிற்கு செனேட் உறுப்பினர்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.

இந்த ஆராய்சிப் படிப்பில் சேர விரும்புவோருக்கு என்.சி.ஆர்.எம். உதவித் தொகை அளிக்கவுள்ளது. இந்த ஆய்விற்கு முன் தகுதியாக லைஃப் சயன்ஸ் கல்வி, கால் நடை மருத்துவம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும் இதனுடன் செல் வளர்ப்பு அனுபவமும் மருத்துவப் பட்டப்படிப்பும் அவசியம் என்று என்.சி.ஆர்.எம். தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சிப் படிப்பு முடிந்தவுடன் ஸ்டெம் செல் பி.ஹெச்.டி. பட்டத்தை நாகார்ஜுனா பல்கலைக் கழகம் வழங்கும்.

இந்தக் கல்வி குறித்து விளக்கிய டாக்டர் சாமியேல், “மறு உருவாக்க செல் மருத்துவத் துறை ஒரு வளர்ந்து வரும் சிறப்புத் துறையாகும். ஸ்டெம் செல்கள், முன்னோர் மற்றும் தாவர விலங்குகளின் மரபு மூல செல்கள் ஆகியவற்றின் மறு உருவாக்கத் திறன் மூலம் நோய்களை தீர்ப்பது" என்றார்.

வளர்ந்த நாடுகளில் மருத்துவர்கள் அவர்களின் வேலையில் ஒரு பகுதியாக உயிரியல் விஞ்ஞானிகளுடன் கூட்டிணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர், ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இந்த கூட்டிணைவு அரிதாகவே காணப்படுகிறது என்றார் சாமுயேல்.

ஆனால் இந்த மறு உருவாக்க மருத்துவத்தில், நோய்களுக்கு நிச்சயமான சிகிச்சை குறித்த பிரச்சனைகளை மருத்துவர்கள் சந்திக்கும்போது விஞ்ஞானிகளுடன் கலந்து செல் அடிப்படை சிகிச்சை குறித்து விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவிக்கையில் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil