Publish Date: Thu, 03 Apr 2008 (10:02 IST)
Updated Date: Wed, 02 Apr 2008 (11:51 IST)
ஆசிரியர்கள் தேர்வுக்கு ஏப்ரல் 11ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு 30 மாவட்டங்களுக்கு புதிதாக 150 திட்ட ஒருங்கிணைப்பாளர்களும், 998 வட்டார ஆசிரியர் பயிற்றுநர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள், விவரக் குறிப்புகள் எல்லா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். ரூ.50 ரொக்கமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களை ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் அளிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 6 என்ற முகவரிக்கு எடுக்கப்பட்ட ரூ.300க்கான டி.டி.யையும் இணைக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பார்வை இல்லாதோருக்கு கட்டணம் ரூ.150.
போட்டித் தேர்வு மே 18ஆம் தேதி நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை (http:trb.tn.nic.in) காணலாம்.