சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்ய ஏப்ரல் 8ஆம் தேதி கடைசி என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கண்ட மையத்தில் விண்ணப்பங்களைப் பெறவும் நேர்முகப் பதிவு செய்து, நுழைவுச் சீட்டைப் பெறவும் அதே தினம் கடைசியாகும். விண்ணப்பங்கள் தமிழகத்தில் குறிப்பிட்ட பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் பெறலாம்.
கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய ஒருங்கிணைந்த மையங்களில் நேர்முகப் பதிவு செய்ய ஏப்ரல் 4ஆம் தேதி கடைசியாகும். மேலும் விவரங்களுக்கு www.annauniv.edu/tancet2008 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.