Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் வழியில் மருத்துவ படிப்பு கொண்டுவர நடவடிக்கை: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

Advertiesment
தமிழ்வழி மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் செ‌ன்னை கருணாநிதி
, சனி, 29 மார்ச் 2008 (11:12 IST)
''தமிழ்வழியில் மருத்துவ படிப்பு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னஅரசு மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் நட‌த்து‌ம் `குறிஞ்சி முத்தமிழ் மன்றம்' என்ற அமைப்‌பி‌னஆண்டுவிழா‌வி‌லகல‌ந்தகொ‌ண்டசுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பே‌சுகை‌யி‌ல், பொதுவாகவே மருத்துவர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இடைவெளி அதிகம். இப்படிப்பட்ட நிலையில், அறிவியல் தமிழை வளர்க்கும் நோக்கில் தனி அமைப்பை ஏற்படுத்தி அதை தொடர்ந்து நடத்தி வருகிறது பாராட்டுக்குரியது.

முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ் அரியணை ஏறும் காலம் வெகு தொலைவில் இல்லை. அந்த வகையில் மருத்துவ துறையிலும் தமிழ் அரியணை ஏறும். மருத்துவ படிப்பை தமிழ்வழியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் படிக்கிற மாணவர்கள் சென்னைக்கு அருகே அலமாதி என்ற கிராமத்தை தத்தெடுத்து மருத்துவ சேவை செய்து வருகின்றனர். ஒரு கிராமத்தை மட்டுமல்ல ஏராளமான கிராமங்களை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தத்தெடுத்து சேவையாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் எ‌ன்றஅமை‌ச்ச‌ரப‌ன்‌‌னீ‌ரசெ‌ல்வ‌மகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil