இன்றைய காலக்கட்டத்தில் சமூக மேம்பாட்டிற்கு கல்வித் துறை மிகவும் கவனிக்கப்பட வேண்டும். எனவேதான் இலவச கல்வியை சட்டமாக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று 'சார்க்' நாடுகளுக்கான சமூக மேம்பாட்டு அமைச்சர்களின் இரண்டாவது கூட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங் துவக்கி வைத்து பேசுகையில், "நாட்டின் சமூக வளர்ச்சி பின்தங்கியிருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் வலிமையாகவும், கவர்ச்சிகரமாகவும் இருப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை. இந்திய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் கட்டாயாமாக்குகிறது. கல்வியைத் தவிர, சமூக மேம்பாட்டின்கீழ் பொது சுகாதாரம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது,
6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச கல்வியையும், கட்டாய கல்வியையும் வழங்குவதை சட்டமாக இயற்ற திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, பூடான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்று தங்களது நாட்டில் நிலவும் சமூக பிரச்சனைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறுத்திம் பேசினர். இதுதவிர, கூட்டத்திற்கு கொடுக்கப்பட்ட தகவல் பெறும் உரிமை மற்றும் சமூக மேம்பாடு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது.