Publish Date: Thu, 19 Jul 2007 (15:17 IST)
Updated Date: Thu, 19 Jul 2007 (15:16 IST)
பொறியியல் கல்லூரிகளுக்காக தமிழகத்தில் மேலும் ஒரு அண்ணா பல்கலைக்கழகத்தை திருநெல்வேலியில் துவக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 237 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. தற்போதைய நிலையில் பொறியியல் படித்தவர்களுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்புகள் இருந்து வருகிறது.
இதனால் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சென்னையில் மட்டும் இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்து ஏற்கனவே திருச்சியிலும், கோவையிலும் 2 புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது தென்மாவட்டங்களுக்கும் பொறியியல் கல்வியை விரிவுபடுத்த திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரில் மேலும் ஒரு தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்க தமிழக அரசு தீர்மானித்து அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
மிகவிரைவில் இந்த பல்கலைக்கழகத்திற்கான நிர்வாக பணிகள் தொடங்கப்பட்டு துணைவேந்தர் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.