Newsworld Bbctamil Bbctamilnews 1403 24 1140324027_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமானத் தேடல் வேட்டை: மேலும் புதிய பொருட்களை சீன விமானம் கண்டது

Advertiesment
விபத்து
, திங்கள், 24 மார்ச் 2014 (13:04 IST)
காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சீன விமானம் ஒன்று இந்திய பெருங்கடலில் பல அடையாளம் தெரியாத பொருட்களை கண்டுபிடித்துள்ளதாக சீன செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன இந்த விமானம், அது காணாமல் போயிருக்கலாம் என்று எண்ணப்படும் ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில், இந்த சதுர வடிவ வெள்ளை பொருட்கள் மிதந்து கிடந்ததாக செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது.

இந்தப் பொருட்களை சோதனை செய்ய ஒரு சீன ஐஸ் உடைக்கும் கப்பல் அனுப்பப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட எழுபதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் மேற்கொள்ளப்படும் இன்றைய தேடுதல் நடவடிக்கைகளில் பத்து விமானங்கள் பங்கு கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன அந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெரும்பாலும் சீனர்கள் உட்பட 239 பேர் பயணம் செய்தனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil