காணாமல் போன மலேசிய விமானத்தை, சீனா, தனது நிலப்பரப்புக்குள் தேடும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறது.
பத்து நாட்களுக்கும் முன்னர் காணாமல் போன இந்த விமானத்தில் பயணம் செய்த சீனப் பயணிகளின் பின்னணி குறித்து தீர ஆராயப்பட்டதாகவும், அவர்களில் யாருக்கும் விமானக் கடத்தலிலோ அல்லது பயங்கரவாதத் தாக்குதலிலோ தொடர்பு இருக்கும் என்று நம்புவதற்கான ஆதாரம் இல்லை என்றும், மலேசியாவுக்கான சீனத் தூதர் ஹுவாங் ஹுய்க்காங் தெரிவித்தார்.
இந்த விமானம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்று கொண்டிருந்தபோது, புறப்பட்ட சுமார் 45 நிமிடங்களுக்கெல்லாம் ராடார் தொடர்பை இழந்தது.
அதைத் தேடும் பணியில் இப்போது 26 நாடுகள் ஈடுபட்டிருக்கின்றன.
மலேசியாவுக்கு வடக்கே ஆசியாவின் சில பகுதிகளிலும், தெற்கே இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் இதைத் தேடும் வேலைகள் நடந்து வருகின்றன.
பல நாடுகள் , இந்த விமானம் தங்கள் வான்பாதைக்குள் வந்திருக்கும் என்பதை நிராகரித்திருகின்றன.